சுமார் 130 கோடி போலிக் கணக்குகளை நீக்கியது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில் இருந்து சுமார் 130 கோடி போலிக் கணக்குகளை நீக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவை கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் நீக்கப்பட்டதாக பேஸ்புக் தெரிவித்தது.

இது மட்டுமின்றி கொரோனாவைரஸ் பாதிப்பு குறித்து பரவிய 1.2 கோடி போலி தகவல்கள் அடங்கிய பதிவுகள் நீக்கப்பட்டதாகவும் பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது.

மேலும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் போலி செய்தி பரவலை எவ்வாறு கையாள்கின்றன என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விரைவில் விளக்கமளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *