மைக்ரோசொப்ட் அறிமுகம் செய்யும் Edge Addons Store

மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலாவிக்கு பதிலாக எட்ஜ் எனும் உலாவியினை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

முன்னைய இணைய உலாவியையும் விட வேகம் கூடியதாக காணப்படும் இவ் உலாவியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இப்படியிருக்கையில் குறித்த உலாவிக்காக Addons Store இனை மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இது டெவெலொப்பர்களுக்கு உதவும் வகையிலேயே அறிமுகம் செய்யப்படுவதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எட்ஜ் உலாவியினை மேலும் மேம்படுத்த முடிவதுடன் பயனர்களுக்கு சிறந்த இணைய உலாவல் அனுபவத்தினை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி முதல் இவ் வசதியினைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *