ஐக்கிய அரபு அமீரகம் VPN பயன்பாடு தொடர்பில் புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்போர் VPN தொடர்பின் மூலம் அமீரக அரசு தடைசெய்த இணையத்தளம் மற்றும் செயலிகளை பாவனை செய்யுவது சட்டவிரோதம் எனவும் இரண்டு மில்லியன் திர்கம் வரை தண்டப்பணம் செலுத்த நேரிடும் என அமீரகத்தின் இணையவழி பாதுகாப்பு பிரதானி முஹம்மது அல் குவைதி சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உலகளாவிய கருத்தரங்கு மற்றும் செயலமர்வில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் VPN தொடர்பின் மூலம் சாதாரணமாக இணையத்தை அனுகுவது குற்றமாகது எனவும் ஏதேனும் குற்றச்செயல்களை புரிவதற்காக VPN தொடர்பினை ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு தொழிலாளர்கள் VPN தொடர்பின் மூலம் வாட்சாப் மற்றும் இதற தொலைத்தொடர்பு செயலிகளை பாவனை செய்வது தொடர்பில் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார், கடந்த ஆண்டு அதிகளவான VPN செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டு பாவனையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் பாவனைக்காக அமீரக அரசு அங்கீகரித்த பாதுகாப்பான செயலிகளை (GoChat, Botim) அழைப்புக்களை மேற்கொள்ள பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *