அனைத்து தொலைபேசி பாவனையாளர்களுக்கும் சந்தோசமான செய்தி!
இலங்கையில் தொலைபேசியை பயன்படுத்தும் அனைவரும் தங்களது இலக்கங்களை மாற்றாது வேறு தொலைபேசி வலையமைப்பின் சேவையை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைவருக்கும் நன்மை பயக்கும் நோக்கில் இந்த வாய்ப்பினை வழங்க தொலைத் தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள உங்கள் சேவை வழங்குனர் திருப்திகரமான சேவையினை வழங்காதவிடத்து அதே இலக்கத்தில் வேறு ஒரு சேவை வழங்குனரின் வலையமைப்பின் கீழ் நீங்கள் தொடரலாம்.
அதற்கமைய இலங்கையில் தற்போது பாவனையிலுள்ள 071 , 077 , 072 , 078 மற்றும் 075 என்ற இலக்கங்களை பொது இலக்கங்களாக அறிவிக்கப்படவுள்ளது.
