அப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் நீதிமன்றம் புதிய தடையும் அபராதமும் விதிப்பு.

புதிய ஐபோன்களுக்கு சார்ஜ் செய்யும் கருவி இல்லாமல் விற்பனை செய்வதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பிரேசில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி அப்பிள் தொழிநுட்ப கம்பனியை ஆட்டம் காணவைத்துள்ளது.

பிரேசில் நீதிமன்றம் 20 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. உலகின் முன்னணி மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அண்மைகாலமாக தமது ஐபோன் மொபைல்களுடன் சார்ஜர் கருவி வழங்காமலே விற்பனை செய்து வருகிறது.

இதனால் ஐபோன் வாடிக்கையாளர்கள் சார்ஜர் கருவியை தனியாக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழலில், அண்மையில் பிரேசிலில் சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் அந்நாட்டு அரசு இடைக்கால தடை விதித்திருந்தது.

இதனிடையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மொடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு 2 கோடி டொலர் அபராதம் விதித்துள்ளது பிரேசிலுள்ள சாவ் பாலோ சிவில் நீதிமன்றம்.

அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரேசிலில் ஐபோன்-12 மற்றும் ஐபோன்-13 வாங்கிய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சார்ஜர் வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபோன்களில் சார்ஜர் வைக்காததற்காக இரண்டாவது முறையாக ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *