Tamil Tech Blog

சமூக ஊடகத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலத்தை இலங்கை அரசு அமுல்படுத்தியுள்ளது.

Sri Lanka passes new law to regulate online content

இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களை நெறிப்படுத்தும் மற்றும் கண்காணிக்கும் புதிய சட்டமூலத்தை இலங்கை அரசு பாராளுமன்ற பெரும்பாண்மை ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளது.

இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம், தரவு திருட்டு மற்றும் இணைய மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக போராடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு 8,000 மேற்பட்ட இணைய குற்றங்கள் தொடர்பிலான புகார்கள் வந்துள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டங்கள் தேவை என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். அதனால்தான் நாங்கள் இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம், என்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.

குறிப்பாக இந்த சட்டமூலம் மதங்களுக்கிடையே குரோத கருத்துக்களை வெளியிடும் மற்றும் அரசுக்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிரானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனியாவது இனவாதிகளும் மதவாதிகளும் சமூக ஊடகங்களை சேருபூசும் கருவியாக பாவனை செய்வதை நிறுத்துவது சாலச்சிறந்தது.

Exit mobile version