TikTok தொடர்பில் Twitter வெளியிட்டுள்ள கருத்து

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் ஒரு அப்பிளிக்கேஷனாக டிக் டாக் காணப்படுகின்றது.

வீடியோ டப்பிங் செய்யக்கூடிய வசதியை தரும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது உலகெங்கிலும் மிகவும் பிரபல்யமாக விளங்குகின்றது.

எனினும் அமெரிக்காவில் இந்த அப்பிளிக்கேஷனுக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதுடன், தடை செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டிக் டாக்கினை அமெரிக்க நிறுவனமான மைக்ரோசொப்ட்டிற்கு விற்பனை செய்ய பைட் டான்ஸ் தீர்மானித்துள்ளது.

எனினும் இதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் குறித்த நிறுவனத்தினை கொள்வனவு செய்வதற்கு டுவிட்டர் நிறுவனம் தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளது.

அடுத்துவரும் 45 நாட்களுக்குள் மைக்ரோசொப்ட் நிறுவனம் டிக் டாக்கினை கொள்வனவு செய்யவில்லையாயின் தடை செய்யப்படவுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே டுவிட்டர் தனது விருப்பத்தினை தெரிவித்துள்ளதாக ராய்டர் செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

Loading

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *